Tamil Movie Ads News and Videos Portal

மாயவலை படத்தை எடுத்ததிற்கான நோக்கம்?- அமீர் விளக்கம்

அமீர் வெற்றிமாறன் கூட்டணியில் மாயவலை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் நடிகர் அமீர், இயக்குநர் வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்று இயக்குநர் அமீர் பேசியதாவது,

“இந்தப்படத்தை எடுக்கும் நோக்கம் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான். அதர்மம் என்ற மாபெரும் படத்தைக் கொடுத்தவர். அதன்பிறகு சில படங்கள் எடுத்திருந்தார். அவரின் தம்பி எனது நெருங்கிய நண்பர். அதர்மம் ஷுட்டிங் நடைபெறும் போது நான் வேடிக்கைப் பார்க்கச் சென்றேன். அவரிடம் உதவி இயக்குநராக சேர்வதற்கு அலைந்தேன். எனக்கும் அவருக்குமான உறவு மிகவும் பெரியது. என்னுடைய எல்லாத் திரைப்படங்களிலும் அவர் இருந்திருக்கிறார். அவர் சினிமாவைப் பற்றிய அதிகப்புரிதலோடு இருப்பவர். அவர் எனக்கு சினிமா கற்றுக்கொடுத்துள்ளார். அவர் இந்தக் கன்டெண்டை சொன்னவுடன் நானே தயாரிக்கிறேன் என்றேன். சில ஹீரோக்கள் இந்தப்படத்தில் நடிக்க தயங்கினார்கள். இவர் கரண்ட்ல இல்ல என்றார்கள். அதன்பின் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்னையே நடிக்கச் சொன்னார். சரியென்று நானே நடித்தேன். பணத்தேவை நிறைய தேவைப்பட்டது. நிறைய நண்பர்கள் உதவினார்கள். போகப்போக படத்தின் பட்ஜெட் அதிகமாகியது. நான் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் வந்து உதவி செய்தார். படம் இப்போது முழுமையாக ரெடியாகிவிட்டது. அந்தச் சமயத்தில் வெற்றிமாறன் உள்ளே வந்து படத்தை அவரே வெளியிடுகிறேன் என்றார். அது எங்களுக்கு பெரிய உத்வேகம். என் முதல் படத்திற்கு அட்வான்ஸ் கூட வாங்காமல் எப்படி சப்போர்ட் செய்தாரோ அதேபோல் இந்தப்படத்திற்கும் உதவி செய்தார் யுவன்சங்கர் ராஜா. படத்தின் நடிகர்கள் நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது அது மனதிற்கு நிறைவாகவும் இருக்கிறது” என்ற அமீர் மேலும் படம் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களைப் பகிர்ந்து விழாவை கலகலப்பாக்கினார்