போர்முனையை விட பேனாமுனை கூர்மையானது என்ற கூற்றை வரலாறு இன்று வரை நிரூபணம் செய்தே வருகிறது. அதனால் ஊடகம் சார்ந்த படங்கள் வந்தால் அப்படம் சமூகத்திற்கு நெருக்கமான படமாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் மாறன் மாற்றாக இருக்கிறான்
மிகச்சிறந்த நடிகர் என பெயரெடுத்த நடிகர் தனுஷ் இவ்வளவு அசால்டாக ஒரு படத்தில் தேமே என வந்துபோவாரா…? கதை திரைக்கதை எவ்வளவு பலகீனமாக இருந்தாலும் தன் வேலையில் குறை வைக்கமாட்டார் தனுஷ். ஆனால் இப்படத்தில் அவர் தன்னை முழுமையாக ஒப்படைக்கவில்லை என்பது தெரிகிறது. மாளவிகா மோகனன் பல காட்சிகளை பப்ளிகாம் துணை கொண்டே கடத்தி விடுகிறார். படத்தில் கவனம் குவித்த ஒரே நடிகர் அமீர் மட்டுமே. அவரின் கேரக்டர் வார்ப்பும் கன்வின்சிங்காக இருக்கிறது நடிப்பும் கனகச்சிதமாக இருக்கிறது. தனுஷுக்கும் அவருக்குமான ஆக்ஷன் சீக்வென்ஸும் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. அடுத்து படத்தில் நம்மை கவனிக்க வைப்பவர் ஸ்மிருதி வெங்கட். நெஞ்சில் அவரது கேரக்டர் அழகாக வந்தமர்கிறது…
ஆடுகளம் நரேன் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை..மற்றபடி மாஸ்டர் மகேந்திரன் உள்பட பல நடிகர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை ஒன்றுமே இல்லாத கதை மற்றும் மேக்கிங்கை கரை சேர்க்கபெரிதும் போராடியிருக்கிறார் ஜீவி பிரகாஷ். ஒளிப்பதிவாளரும் தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
கதைக்குள் ஹீரோக்களை கொண்டு வராமல் ஹீரோக்களுக்கு என்று கதையை இஷ்டத்திற்கு வளைக்கும் போக்கு அவசியம் மாற(ன்)ணும்
-மு.ஜெகன் கவிராஜ்