நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் இசை சார்ந்த காதல் கதையான மாறாவின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ 29 டிசம்பர் அன்று வெளியிட்டது. இது ரசிகர்களை, காதலையும், நம்பிக்கையையும் பேசும் மாயக் கதைக்குள் அழைத்துச் சென்றது. ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்து அவரது மனங்களை வென்றது. இந்த ட்ரெய்லர் மீது ரசிகர்களால் அன்பு காட்டுவதை நிறுத்த முடியவில்லை.
முன்னதாக, வெறும் 2 மணி நேரங்களில் எப்படி 20 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றது என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்திருந்தார். தற்போது, புது மைல்கல்லை எட்டியிருக்கும் ட்ரெய்லர், 24 மணி நேரங்களில் 80 லட்சத்துக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து இன்னும் அந்த எண்ணிக்கையைக் கூட்டி வருகிறது.இந்த ட்ரெய்லர் குறித்த ரசிகர்களின் கருத்துகளும், ட்ரெய்லருக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, ரசிகர்களிடமிருந்து அளப்பரிய அன்பையும், பாராட்டுகளையும் ட்ரெய்லர் பெற்றுள்ளது தெரிகிறது.
இன்று, தயாரிப்புத் தரப்பான ப்ரமோத் ஃபிலிம்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “மாறாவுக்கு நீங்கள் காட்டிய அன்பையும் ஆதரவையும் பார்த்து திக்குமுக்காடிப் போயிருக்கிறோம். 80 லட்சம் பார்வைகள், மேலும் கூடிக்கொண்டு வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளனர்.
Overwhelmed by all the love and support you've been showering on #MAARA. 8 Million and counting!!#MaaraOnPrime@ActorMadhavan @ShraddhaSrinath @SshivadaOffcl @ShrutiNallappa @dhilip2488 @DesiboboPrateek @GhibranOfficial @PrimeVideoIN @DoneChannel1 @APIfilms @thinkmusicindia pic.twitter.com/KYzGCGwOZ7
— Pramod Films (@pramodfilmsnew) December 30, 2020
திலீப் குமார் இயக்கியிருக்கும் மாறா திரைப்படத்தை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர், பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளில், பகுதிகளில் இருக்கும் ப்ரைம் உறுப்பினர்கள், 8 ஜனவரி 2021 முதல், மாறா திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
ட்ரெய்லர் இணைப்பு: https://youtu.be/Lv5KUKKwQEw