Tamil Movie Ads News and Videos Portal

மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன் TR!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் TR ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.