Tamil Movie Ads News and Videos Portal

மாநாடு- விமர்சனம்

- Advertisement -

பல்வேறு பிரச்சனைகள் நெருக்கடிகளை சந்தித்து இன்று திரையைத் தொட்டது மாநாடு திரைப்படம். அது ரசிகர்களின் மனதையும் தொட்டதா?

உலகசினிமாக்காரர்கள் குத்தகைக்கு எடுத்துள்ள டைம்லூப் தான் கதை. பிரேம்ஜியின் காதல் கல்யாணத்தை நடத்தி வைக்க துபாயில் இருந்து கோவை வருகிறார். அவர் வரும்நாளில் கோவையில் நடக்கும் மாநாட்டில் முதல்வரை கொலைசெய்ய ஒரு திட்டம் அரங்கேறுகிறது. உதவி கமிஷ்னர் எஸ்.ஜே சூர்யா தலைமையில் அந்தச் சம்பவம் நடக்க சிம்பு பலிகடா ஆகிறார். சிம்பு பலியான அடுத்த நொடியே அதேநாள் திரும்பவும் வருகிறது…அது சிம்புவிற்கு மட்டுமே தெரிகிறது..முதல்வரின் மரணத்தை சிம்பு தடுக்க முயற்சிக்கும் போது அடுத்த ட்விஸ்ட் அரங்கேறுகிறது. அதுதான் படத்தின் முக்கியமான ட்விஸ்ட்.. இப்படியொரு கான்செப்ட் கிடைத்தால் திரைக்கதையில் புகுந்து விளையாடலாம் அல்லவா? அதைத்தான் செய்திருக்கிறார் வெங்கட்பிரபு.

சிம்புவின் நடிப்பில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜி. சண்டைக்காட்சிகளில் கடின உழைப்பு தெரிகிறது. அவரை பின்சீட்டுக்கு தள்ளும் வகையில் பின்பாதியில் அப்ளாஸை அள்ளுகிறார் எஸ்.ஜே சூர்யா. இளசுகளின் கைத்தட்டல்களை மொத்தமாக வாங்குகிறார் மனிதர். மூன்றாவது படத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ஒய்ஜி மகேந்திரன். நாயகி கல்யாணி நல்ல தேர்வு. இன்னோசென்ட் கேரக்டரில் அசத்தியுள்ளார். இன்னொரு நாயகியான அஞ்சனா கீர்த்தி கொடுத்த வேலைக்கு குறைவில்லை. அவரது கேரக்டரைக் கொண்டு இன்னும் கொஞ்சம் திரைக்கதைக்கு கலகலப்பைச் சேர்த்திருக்கலாம். எஸ்.ஏ சந்திரசேகர், வாகை சந்திரசேகர் பிரேம்ஜி, கருணாகரன் என நட்சத்திரப்பட்டியல் அனைவருமே நச் ரகம்

மாநாடு படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசையில் தனி ராஜங்கமே நடத்தியிருக்கிறார். குறிப்பாக எஸ்.ஜே சூர்யாவிற்கான பிஜி எம் வேறமாதிரி. படத்தின் ஒளிப்பதிவில் ஆகத்தரம் தெரிகிறது. சிறப்பான எடிட்டிங் அட்டகாசமான ஸ்டண்ட் என படமெங்கும் பாசிட்டிவ் கொட்டிக்கிடக்கிறது

மிகுந்த சிக்கல் நிறைந்த கதையில் இப்படியொரு தெளிவான திரைக்கதை அமைத்து தனித்தப் பாராட்டுக்களை அள்ளிச் செல்கிறார் வெங்கட் பிரபு. ஒரு மிகப்பெரிய நிறுவனம் தயாரித்திருப்பது போல மிகப்பிரம்மாண்டமாக படத்தைத் தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒய்.ஜி மகேந்திரனை வைத்து திராவிட கட்சிகளில் பெரும் கட்சியான ஒரு கட்சியை ஏகத்துக்கும் விமர்சனத்தைத் தெளித்திருப்பது. சிவனும் அல்லாவும் ஒன்னு என்றபடியே சிவன் கோவிலுக்குள் இருந்து ஹீரோ வந்திருப்பதாலே உலகை காக்கும் பொறுப்பு அவருக்கு வந்திருக்குது என மறைமுகமாக கட்டமைப்பது..அல்லாவும் சிவனும் ஒன்றிணைந்து தீய மனிதர்களை வேரறுப்பது என சில காட்சிகளை கங்கை அமரன் தான் இயக்கினாரோ என டவுட் வரும் இடங்களும் படத்தின் இருக்கு தான். ஆனால் இதை எல்லாம் தாண்டி படம் துளியும் சோர்வின்றி பெரும் சுறுசுறுப்போடு பயணிக்கிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு வெங்கட் பிரபுவிற்கும், சிம்பிவிற்கும் ஒரு மாஸ் ஹிட் இப்படம் என்பது ஒரு சந்தோசம் என்றால், சிறுபட தயாரிப்பாளர்களுக்கும், புதிய திறமையான படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் சுரேஷ் காமாட்சிக்கு இப்படம் கல்லாவை நிச்சயம் நிரப்பி கொடுக்கும் என்பது கூடுதலான இன்னொரு சந்தோசம்!

சென்ற மாதம் டாக்டர் இந்த மாதம் மாநாடு தமிழ்சினிமா பொழச்சுக்கும் சாரே

மு.ஜெகன் கவிராஜ்

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.