உள்ளது உள்ளபடி நடந்தது நல்லபடி என்பது போல அமைந்தது மாநாடு படத்தின் வெற்றிவிழா. சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் வெற்றி தமிழ்சினிமாவிற்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தை சுரேஷ்காமாட்சி பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் திரையில் ஜொலித்தார்கள். இப்படத்தின் வெற்றிக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தான் பெருங்காரணம். அதற்கு நன்றி சொல்லும் விதமாக இன்று ஒருவிழாவை தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அரேஞ்ச் செய்திருந்தார். விழாவில் சிம்பு கல்யாணி தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தவிழா சினிமா உலகுக்கே புது எனர்ஜியை கொடுத்துள்ளது.