சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மாநாடு படத்தின் நேற்றைய படப்பிடிப்பின்போது, சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிலம்பரசன்.
சிலம்பரசன் சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக்குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் உடனே கைதட்டல் மூலமாக சிலம்பரசனுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.