பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.‘மாமன்னன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15வது படமாகும்.
இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் – இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான், இவர்கள் முவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.பெரும் நட்சத்திரங்கள் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.