அதிர்ஷ்ட நாயகனின் கதை
வறுமைக்கு வாக்கப்பட்டு தன் பெருமையை இழந்து துயருற்று வாழ்கிறார் ஹீரோ துல்கர் சல்மான். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். வங்கியில் வேலை செய்யும் துல்கர் சல்மான் வங்கியில் உள்ள பணத்தை சனிக்கிழமை எடுத்து திங்கள் கிழமைக்குள் பேங்கில் வைக்கிறார். இடையிலுள்ள ஞாயிற்றுக்கிழமையில் ராம்கியோடு சேர்ந்து ஒரு இல்லீகல் தொழில் செய்கிறார். அதன் மூலம் பணம் துல்கரிடம் திரள்கிறது. கதை நடக்கும் காலகட்டம் 80/90 களில். இது உண்மைச் சம்பவமும் கூட. வங்கியில் பெரும் பணக்காரர்கள் பணப்பரிமாற்றம் செய்வதில், வங்கி ஊழியர்கள் எப்படி லாபம் பார்க்க முடியும் என்பதை டீடைல்ஸாக படம் பேசியுள்ளது.
துல்கர் தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் மூலமாக, தன்னை ஒரு தேர்ந்த ரசனைக்காரர் என நிரூபித்து வருகிறார். இந்தப்படமும் அதற்கு ஓர் அத்தாட்சி. துல்கர் நடிப்பிலும் வெளுத்துள்ளார். வறுமை நாட்களிலும், வளமை நாட்களிலும் அவரது உடல்மொழியில் அவ்வளவு வித்தியாசம். நாயகி மீனாட்சி கிடைக்கும் சின்னச் சின்ன இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார். சப்போர்டிங் ஆர்டிஸ்ட் அனைவருமே சிறப்பான தேர்வு. துல்கரின் அப்பா கேரக்டர் நச் ரகம்
பீரியட்ஸ் மூவிக்கான மூட்-ஐ மிகச்சிறப்பாக ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு பெருந்துணையாக இருந்துள்ளார் ஆர்ட் டைரக்டர். பின்னணி இசையும் சரி, பொருத்தமான பாடல்களும் படத்தின் மற்றொரு பலம்
லக்கி பாஸ்கர் என்ற டைட்டிலுக்கு 100% படம் நியாயம் செய்துள்ளது. ஒரு தனி மனிதனுக்கு வரிசையாக இப்படியெல்லாம் அதிர்ஷ்டம் வருமா? என்ற இயல்பான கேள்விகளை திரைக்கதையில் லாஜிக் மூலம் அழகாக பதில் சொல்லியுள்ளார் இயக்குநர். “கள்ளன் பெரிதா? காப்பவன் பெரிதா?” என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதேபோல் கண்டிசன்ஸ் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தாலும், அதையும் தாண்டி கரப்சன் நடக்கவே செய்யும். ஒரு புத்திசாலித்தனமான பண சீட்டராக ஹீரோ வருகிறார். அதற்கான காரணங்களை இயக்குநர் சரியாக அடுக்கினாலும், ஹீரோ செய்வதை நியாயப்படுத்தாமல் இருக்கிறார்.
வங்கியின் நுணக்கங்களையும், அந்தக் கால பங்குச் சந்தைப் பற்றிய விபரங்களையும் சிறப்பாக காட்டியுள்ளனர். இந்த தீபாவளிக்கு பல இம்ப்ரமேஷனோடு, என்கேஜும் செய்து அசத்துகிறார் இந்த லக்கி பாஸ்கர்
3.5/5
-தமிழ் வெண்பா