உலகத்தோட இயக்கம் எவ்வளவு நவீனமா மாறினாலும், மனிதனோட எமோஷ்னல் மட்டும் மாறவே மாறாது. குறிப்பா காதல் சார்ந்த எமோஷ்னல் அப்படியே தான் இருக்கும் என்பதை நச்னு சொல்லிருக்கு லவ்டுடே
ப்ரதீப் ரங்கநாதன் இவானா இருவரும் காதலர்கள். இவானாவின் அப்பா சத்யராஜ் ப்ரதீப்பிற்கும் இவானாவிற்கும் ஒரு நிபந்தனை வைக்கிறார். இருவரும் ஒருநாள் தங்களோட மொபைல்ஸை மாத்திக்கணும். சிம்பிள்! ஆனால் இருவருக்கும் அது பெரும்பயத்தை பயத்தை உண்டு பண்ணுது. அது ஏன்? இருவரின் பிரைவசியும் இருவருக்கும் தெரிந்தால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதே படத்தின் கதை
ப்ரதீப் ரங்கநாதன் காதல் கொண்டேன் தனுஷ் போல இருக்கிறார். திருடா திருடி தனுஷ் போல நடித்துள்ளார். ஆனால் அவரின் இமிடேட் கலந்த நடிப்பு நம்மை எங்குமே டிஸ்டர்ப் செய்யவில்லை. So நடிகராக ப்ரதீப் ஜெயித்துவிட்டார். இவனா எமோஷ்னல் காட்சிகளில் அட சொல்ல வைக்கிறார். ராதிகா சரத்குமார், சத்யராஜ் தத்தம் தன் பங்கிற்கு அசத்தியுள்ளார்கள். சர்பைரஸாக யோகிபாபுவின் கேரக்டர் அட்டகாசம். அவருக்கான எமோஷ்னல் பினிஷிங் சீன் பக்கா
யுவனின் இசையில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி 2K கிட்ஸின் ஆல்டைம் கொண்டாட்டம். தினேஷ் புருஷோத்தமன் தேர்ந்த ஒளிப்பதிவால் கலக்கியிருக்கிறார்.மிகப்பெரிய படங்களைத் தயாரித்து வந்த AGS நிறுவனம் தரமான கதைகளை கடைந்தெடுத்து இப்படியான படங்களையும் தயாரித்து வருவது தமிழ்சினிமாவின் பாசிட்டிவ் வைப்!
நம்ம மேல அன்போட இருக்குறவங்களுக்கு நாம செய்ற மரியாதை அவங்க மேல நாம வைக்கிற நம்பிக்கை தான் . அன்புமேல வைக்கிற அந்த நம்பிக்கை எல்லா விதமான சலனங்களையும் தடுக்கும், அப்படியே சில தவறுகள் இருந்தாலும் அதைப் பொருத்துக் கொள்ளும் என்று கதையை முடித்துள்ளார் இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன். அவர் ஓர் இயக்குநராக ஜெயித்த இடம் இது
ஒரு படத்தின் திரைக்கதையை சமீபகாலப்படங்களில் இவ்வளவு இலகுவாக அணுகிய இயக்குநர்கள் மிகக்குறைவே. எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் நகர்த்திச் சென்றுள்ளார் ப்ரதீப். மேலும் இன்றைய தலைமுறை காதலர்களுக்கு இணையதளம் மூலம் ஏற்படும் உளவியல் சிக்கலையும் பேசி இந்த வாரத்தின் நம்பர் ஒன் படத்தைக் கொடுத்துள்ள இயக்குநர் & ஹீரோ ப்ரதீப் ரங்கநாதனுக்கு 2K ஹார்ட்டீன்ஸ்
4/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Lovetoday #லவ்டுடே