ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் (எஸ் டி ஆர்) இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 4 அன்று இப்படம் வெளியாகிறது.
இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.”இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ ஈர்க்கும்,” என்று படக்குழு கூறுகிறது. ‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
#Lovetoday #லவ்டுடே