சென்றமாதம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற லவ்டூடே படம் தமிழ்சினிமாவிற்கு பெரும் பூஸ்டராக அமைந்தது. சிறந்த திரைக்கதை & பக்கா மேக்கிங் என மாஸ் கமர்சியல் மெட்டிரியலாக வெளியான இப்படத்தின் வெற்றிக்கு ஊடகங்களும் பெரும் காரணம் என்பதால் இன்று படத்தின் தயாரிப்பாளர் டீமில் இருந்தும், இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனும் நன்றி நவில்தல் விழாவை நடத்தினார்கள். விழாவில் கல்பாத்தி அர்ச்சனா ப்ரதீப் ரங்கநாதன் இருவரும் மீடியாவிற்கு பெரும் நன்றியைத் தெரிவித்தார்கள்.
மேலும் கன்டென்ட் தான் ஹீரோ என்றும், சூப்பர் ஸ்டார்ஸ் எல்லாம் சிறிய படங்களில் இருந்து தான் வருகிறார்கள் என்றும் அர்ச்சனா கல்பாத்தி பேசினார். இயக்குநரும் நடிகருமான ப்ரதீப் ரங்கநாதன், “என் மீது பாதி நம்பிக்கையும் உங்கள் (மீடியா) மீது பாதி நம்பிக்கையும் வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை உண்மையானதிற்கு நன்றி. விரைவில் 50-ஆவது நாள் வெற்றிவிழாவில் சந்திக்கிறோம்” என்றார்