RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
இவ்விழாவினில் நடிகை வாணி போஜன் பேசியதாவது…
முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா ? என யோசித்தேன் ஆனால் இந்தக்கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப்படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
இப்படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப், ஆகியோர் நடித்துள்ளனர்.