இணையரோட போன் பாஸ்வர்ட் மறைக்கப்பட்டாலோ, மறுக்கப்பட்டாலோ மனசு என்னபாடு படும்னு ஒரு சிறுகதை பேசுது. 2010-க்கு மேல கல்யாணம் பண்ணுன தலைமுறையோட உளவியலை அருமையா அலசிருக்க சிறுகதை அது
மந்திரமாவது நீறுன்னு ஒரு கதை. நச்சின்னு இருக்கு. பொண்டாட்டிக்கு மாதவிலக்குன்னா வீட்டை விட்டு விலக்கி வைக்கிற ஒன்னா நம்பர் பூமர் ஒருத்தன். தீட்டுன்னா அன்பால தீண்டுறதே பாவம்னு காலந்தள்ளுத காலக்கொடுமைக்கு சொந்தக்காரனான அவனுக்கு குதத்துல புண்ணு வந்து ரத்தம் கசியுது. ஆபிஸ்ல உக்கார முடியல. வீட்டுக்கு வந்தபிறகு அவனோட மக அப்பனோட ஜட்டில இருக்க ரத்தக்கறையைப் பார்த்து விபரம் கேட்குறா. அவன் குதநோய் வந்த காரணத்தையும் ஆபிஸ்ல லீவு கிடைக்காததையும் சொல்லுதான். நாளைக்கு ரத்தக்கசிவோட என்னனி வேலை பார்க்கன்னு புலம்புறான். தகப்பன் புலம்புறதைக் கண்டதும் மக, அவளோட பேட்-ஐ எடுத்துக் குடுத்து மாட்டிக்கச் சொல்றா!!
அவன் மகளை விநோதமா பார்க்கான். ரத்தக்கசிவு வெளில தெரியாது மாட்டிக்கிங்கப்பான்றா. பொம்பளைங்க ப்ரீயட் டேய்ஸ்ல மாட்டுற பேட்- ஐ இவன் ஒன் டே மாட்டிட்டு சந்திக்கிற ‘பின்’ விளைவுகளும் அதன்பின் நிகழ்ற நல் விளைவுகளும் இந்தக் கதையின் அல்டிமேட் ரகம்ஸ்..
ரயிலிசை கதையில வர்ற பழனி அண்ணனையும் அமுதாக்காவையும் நிச்சயம் எல்லாரும் சந்திச்சிருப்போம். ஒரே மேடையில ஒரே பாட்டைப் பாடுற அவங்களுக்குள்ள மன வேறுபாடுகள் இருக்கும்னு ரெண்டுபேர்ல ஒருத்தர் புரிஞ்சிக்கல. அதனால வர்ற விளைவுகள் ரொம்ப விபரீதமானது. பழனி அண்ணன் மன உளச்சளிலும் அவரோட மன உணர்வுலயும் பத்தாண்டுக்கு முன்னவுள்ள என்னையே பார்த்தேன்..
கனவை நம்பிய பொழப்பு.. ஒரு மயினி கேட்டாவ,
“சினிமாவுல என்ன ஜெகனு ஒனக்கு வருமானம்?”
ரெம்ப முக்கியமான முடிவுக்கான கேள்வி அது.
உண்மயச் சொல்ல முடியாது.. ரெம்பவும் பொய் பேச நாக்கு வரல. அந்த டைம்ல தாழ்வுமனப்பான்மை கொடுத்த அடி இருக்கே. ஆத்தி எதிரிக்கும் வரக்கூடாது. பழனி அண்ணன் வருமானம் பத்தி அமுதாக்கா அடிக்கும் ஒரு கமெண்ட் நம் வாழ்வின் எதோவொரு அவமானப்பக்கத்தை காட்டும். காலச்சித்தன் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என இதைச் சொல்லலாம்
Good one