Tamil Movie Ads News and Videos Portal

”கொரோனா-வை அறிய அவசியம் பாருங்கள்” – உலக நாடுகள் கோரிக்கை

பல் முளைத்த குழந்தை முதல் பல்லிலந்த பெரியவர்கள் வரை அனைவருமே இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது கொரோனா என்கின்ற கொடுங்கோல் வைரஸின் தாக்கம் குறித்துத் தான். மானுட இனத்திற்கே பெரும் சவாலாக மாறி இருக்கும் இந்தப் பிரச்சனையால் ஆங்காங்கே மக்கள் கொத்து கொத்தாக தங்கள் இன்னுயிரை இழந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களின் இன்னுயிரைக் காக்க பெரிதும் போராடி வந்தாலும் கூட, மக்களிடம் அந்த நோய் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தால் மிகுந்த அலட்சியப் போக்கு காணப்பட்டு வருகிறது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என்று அஞ்சப்படும் சூழலில் உலக நாட்டின் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தத் திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2011ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளரான ஸ்டீபன் ஆண்ட்ரீவ் சோடன்பர்க் இயக்கத்தில் வெளியான ‘கண்டஜீயன்’ என்கின்ற ஹாலிவுட் திரைப்படம் தான் அது. மேட் டேமன், மரியன் கொட்டிலாட் மற்றும் பலர் நடித்த இப்படம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதால் பரவும் ஒரு வைரஸின் தாக்கத்தையும் அதன் கொடூரத்தையும் காட்சிபடுத்திய படம் ஆகும். மருத்துவர்கள், மருந்துகள், முகக்கவசங்கள், மருத்துவமனைகள் ஆகியவை இன்றி மக்கள் எப்படி அல்லல்பட்டு தங்களி உயிரைப் பறிகொடுக்கிறார்கள் என்கின்ற காட்சிகள் உயிரை உலுக்கும் வண்ணம் காட்சிபடுத்தப்பட்டு இருக்கும். இப்படத்தைப் பார்த்தாவது தற்போதை நிலையின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.