Tamil Movie Ads News and Videos Portal

லாக்கர்- விமர்சனம்

சீட்டிங் காதலனை திருத்தும் காதலியும் பின் அவர் எடுக்கும் அதிரடி முடிவும் தான் லாக்கர்

வசதியாக வாழ ஒரே வழி திருட்டு என முடிவெடுத்து வாழ்கிறார் ஹீரோ விக்னேஷ் சண்முகம். அவரின் காதலிக்கு திருட்டுத் தொழில் பிடிக்கவில்லை என்பதால் தொழிலை மாற்றுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் காதலியே அவரை திருட்டுக்கு உட்படுத்த அதற்கான பின்னணி என்ன? என்பதாக கதை விரிகிறது

ஹீரோவாக விக்னேஷ் சண்முகம் கொடுத்த பாத்திரத்தைச் சரியாக நிரப்பியுள்ளார். தனது அறிவைப் பயன்படுத்தி கொள்ளையில் செயல்படும் காட்சிகளில் ஈர்க்கிறார். நாயகி நிரஞ்சனா முதல் பட குறைகள் எதுவுமின்றி நன்றாக நடித்து பாஸ்மார்க் வாங்குகிறார். நிவாஸ் ஆதித்தனின் வில்லன் ரோல் ஓகே ரகம்

இசை அமைப்பாளர் வைகுந்த் சீனிவாசன் இசையில் ‘வா பறப்போம்’, ‘யாரோ போல்’ இருபாடல்களும் கேட்கும் ரகம்..பின்னணி இசை ஓகே ரகம். தணிகை தாசன் தன் கேமராவை நேர்த்தியாக பயன்படுத்தி ஒளிப்பதிவில் கவனிக்க வைக்கிறார்

எதையும் கதையாக்கலாம். அதை வெகுஜனம் அங்கீகரிக்க தேர்ந்த திரைக்கதையாக்க வேண்டும். திரைக்கதையில் இன்னும் சற்று முனைப்பு காட்டியிருந்தால் லாக்கர் ஈர்த்திருக்கும்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்