அங்கிதா புரொடக்ஷன் சார்பில் திரு. S.முரளி அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் திரு.ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் திரு.அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன். இப்படத்தில் கதாநாயகியாக கீதா (சஹானா) அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
படத்திற்கு இசை ஜாசி கிஃப்ட், ஒளிப்பதிவு – PK.H. தாஸ். படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சியாளர் ஜாலி பாஸ்டியன் மற்றும் ரவி வர்மா நடன இயக்கத்தை சின்னி பிரகாஷ் மற்றும் மதன் ஹரணி மேற்கொள்கிறார்கள்.பெங்களூரில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.