Tamil Movie Ads News and Videos Portal

இன்று முதல் லாக்கப்

நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படம் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் சிறந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வரும் மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5 இப்படத்தை வெளியிடுகின்றது.

மிகவும் வித்தியாசமான முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நடித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

அறிமுக இயக்குனரான S.G.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் இப்படத்தை நித்தின்சத்யாவின் ஸ்வேத் – எ நித்தின்சத்யா புரோடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

அரோல் கொரேலி இசையமைத்துள்ள “லாக்கப்” படத்தில் சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்ள ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் ஆனந்த மணி கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.