Tamil Movie Ads News and Videos Portal

தி லிப் பாம் நிறுவனம் தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறது!

தி லிப் பாம் கம்பெனி தன்னுடைய முதல் பிறந்தநாளை கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா மற்றும் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. வீகன் லிப் பாம்ஸ், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட டிண்ட்ஸ், கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைப் பெற்றுள்ள பெண்களுக்கு ஏற்ற வகையிலான லிப் பாம்ஸ், குழந்தைகளுக்கான பாதுகாப்பான லிப் பாம்ஸ், மியூட்டோஜெனிக் இல்லாத லிப் பாம்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இல்லாதவை, பேக்கேஜிங்கில் சிறந்தவை, மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான மினி வெர்ஷன்ஸ், சன் புரொடக்‌ஷன் உள்ள லிப் பாம்ஸ், ஆண்டி ஏஜிங் வகையிலானது, கேட்ஜெட் அதிகம் உபயோகிப்பவர்களுக்கான லைஃப்ஸ்டைல் லிப் பாம்ஸ் என பல உறுதிகளை ‘தி லிப் பாம் கம்பெனி’ ஆரம்பித்த நாளில் உறுதி கொடுத்தது.

இந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் லிப் பாம் கம்பெனி தற்போது எவர் ஒருவர் பாதுகாப்பான மற்றும் தரமான லிப் பாம் வேண்டும் எனத் தேடுபவர்களுக்கு ஏற்ற முதல் தேர்வாக உள்ளது. பெண்களின் வலிமையை பறைசாற்றும் வகையில் தி லிப் பாம் கம்பெனி அதன் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாராவை சிறப்பிக்கும் வகையில் the Queen Bee Collection-ஐ முதல் வருடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.நயன்தாராவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெஷல் லிப் பாம் கலெக்‌ஷன் அவரது கையொப்பம் இட்டு அவரது ரசிகர்களுக்காக விற்பனைக்கு வந்துள்ளது.