Tamil Movie Ads News and Videos Portal

’ரங்கஸ்தலம்’ ரீமேக்கை இயக்குகிறாரா லிங்குசாமி..??

- Advertisement -

சென்ற ஆண்டு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில், ராம்சரண், சமந்தா, ஆதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ரங்கஸ்தலம்”. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இயக்கத்தை வேறு ஏதாவது இயக்குநரிடம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம். பெரும்பாலும் இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹிந்தியில் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தை இயக்கி வரும் ராகவா லாரன்ஸ், அப்படத்தின் பணிகள் முடிவடைந்ததும் ரங்கஸ்தலம் தொடர்பான பணிகளைத் தொடங்குவார் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.