2014-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் லிங்கா. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து இருந்தார். ரிலீஸ் நேரத்தில் இந்தக்கதை என்னுடையது என்று மதுரை கோர்ட்டில் ஒருவர் கேஸ் போட்டிருந்தார். வெகு நாட்கள்கா நடைபெற்ற இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளது.
இந்தக் கதை பொன்குமரன் என்பவர் பென்னிக் குவிக் பற்றி எழுதியது என்றும் படக்குழு அதைத்தான் உரிமை பெற்று படமாக்கியது என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் கதை என்னது என்று கேஸை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கே.எஸ் ரவிக்குமார்,
“உண்மை ஒருநாள் வெல்லும் என்பது உறுதியாகியுள்ளது. இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கக் கூடாது. அதற்கு ரைட்டர் யூனியனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்” என்றார்