Tamil Movie Ads News and Videos Portal

தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை-விஜய் தேவரகொண்டா!

இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் லைகர் (Saala Crossbreed). இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான் இந்தியா திரைப்படம்  ஆகஸ்ட்25  அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.பட வெளியீட்டை ஒட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியதாவது…
தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன் வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். லைகர் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி.