குட்டி கதை என்றாலும் அதைச் சொல்லும் விதத்தில் நேர்த்தி இருந்தால் ரசிகனுக்குப் படம் பிடித்துப் போகும். லிப்ட் படம் அப்படிப் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஐடி கம்பெனியில் முதல் நாள் வேலைக்கு வரும் TL கவின் லிப்டுக்குள் மாட்டுகிறார். மாட்ட வைப்பது பேய். அவரோடு அம்ருதா ஐயரும் மாட்டுகிறார். அவரை மாட்டிவிட்டதும் பேய். பேய்களிடம் இருந்து இவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதே லிப்டின் கதை
படம் நெடுக முகத்தாலே நடிக்க வேண்டிய பெரும் கதாப்பாத்திரம் கவினுக்கு. ஒருசில இடங்களில் தடுமாறினாலும் சமாளித்து விடுகிறார். அம்ருதா ஐயர் மிரட்டி இருக்கிறார். பயத்தை அவருக்குள் சேர்த்து வைத்து அதை நமக்கும் கடத்தி இருக்கிறார்.
பேய் படங்களுக்கு ஆன்மாவே சவுண்ட் எபெக்ட் தான். அது லிப்ட் படத்தில் நன்றாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. பின்னணி இசையும் படத்தின் பெரும்பலம்.
மிக நுணக்கமான பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
முன்பாதியில் எஸ்கலேட்டர் வேகத்தில் மெதுவாக நகரும் படம் பின்பாதியில் மின்சார வேகத்தில் சீறுகிறது. க்ளைமாக்ஸில் ஓர் நிறைவையும் தந்துவிடுகிறது.
லிப்ட்- சொதப்பவில்லை
மு.ஜெகன் கவிராஜ்