Tamil Movie Ads News and Videos Portal

”வாழ்க்கை பயத்தை மீறுவதில் இருக்கிறது” – வலிமை அப்டேட்

- Advertisement -

’நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு மீண்டும் அஜீத் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸின் பாதிப்பால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஹீமா குரோஷி,

தான் புல்லட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் “வாழ்க்கை என்பது தினமும் புதிய விசயத்தைக் கற்றுக் கொள்வதிலும் உங்கள் பயத்தை மீறுவதிலும் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் படத்தில் ஹீரோ தல அஜீத் ஃபைக் ரேஸராக நடிப்பது போல் ஹீமாவும் பைக் ரேஸ் தொடர்பான காட்சிகளில் இடம் பெறுவதற்காக புல்லட் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தியிருக்கும் படக்குழுவினர் படத்தில் பைக் ரேஸ் தொடர்பான காட்சிகள் அனைத்தும் மிரட்டும் என்று நம்பிக்கையளித்துள்ளனர்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.