Tamil Movie Ads News and Videos Portal

ஏ.ஆர்.ரஹ்மானிடம் கற்றுக் கொள்ளுங்கள்

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை குல் பனாக் பிரபலமான திரைப்பட கலைஞர்களைப் பேட்டி எடுத்து தன் யு-டியூப் வலைதளத்தில் அந்தப் பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் எப்படி வேலை செய்கிறார்..? என்கின்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்திருக்கும் ரஹ்மான், “நான் பல ஆண்டுகளாகவே என் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டுடீயோவில் தான் பணியாற்றி வருகிறேன். வீட்டில் இருந்தாலும் கூட என் ஸ்டூடியோவிற்குள் நான் நுழையும் போது சாதாரண உடைகளோடு உள்ளே நுழைய மாட்டேன். வீட்டில் இருப்பவர்களையும் அவ்வாறு நுழைய அனுமதிக்க மாட்டேன்.

 

என் அறையில் ஊதுவர்த்தி அல்லது மெழுகுவர்த்தியை எரிய விடுவேன். இது என்னை தொழில்நிமித்தமாக பார்க்க வருபவர்களின் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். செல்போன், லேப்டாப் போன்றவற்றை அணைத்து வைத்துவிடுவேன். ஏனென்றால் அது நான் பணி செய்யும் நேரம் என்று அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். மேலும் பணி செய்து கொண்டு இருக்கும் போது நீங்கள் வரி கட்ட வேண்டும் என்று வரும் சில அழைப்புகள் நம் வேலைகளை கெடுத்துவிடும். மேலும் இது படைப்பாற்றல் தொடர்பான வேலை என்பதால் எல்லா நேரமும் வேலை செய்ய முடியாது. சில நேரம் மிகப்பெரிய யோசனைகள் 5 நிமிடத்தில் கிடைக்கும். சில சமயங்களில் அது கிடைக்க ஒரு வருடம் கூட ஆகும். நான் பல தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறேன். இருப்பினும் இறுதியாக என் அறிவு என்பது கூட்டு உணர்விலிருந்து எல்லையற்ற சக்தியிலிருந்து கிடைக்கிறது என்று எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -