பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்? என்ற பழமொழி ஒன்று உண்டு. அது ரஜினி விசயத்தில் மிகவும் பொருந்தும் என்று சொல்லலாம். சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது லால்சலாம் ஆடியோ லான்ச். சினிமாவில் ஒன்று ரஜினி பேசுபொருளாக இருப்பார். இல்லை ரஜினி பேசியது பேசு பொருளாக இருக்கும். இதுதான் ரஜினியின் கரியர் வரலாறு. லால் சலாம் ஆடியோ லாஞ்சில் அவர் பேசியது எல்லாம் வைரல் ஆகியது. அதே விழாவில் அவரின் மகளும் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா, “என் அப்பா சங்கி இல்லை” என்று பேசினார். அந்தப் பேச்சைக் குறித்து ரஜினியிடம் சிலர், “இது படத்திற்கான ப்ரோமோஷன் ப்ளானா?” என்று கேட்டுள்ளனர். இது அவரின் மகள் ஐஸ்வர்யாவை மிகவும் பாதித்துள்ளது. அது சமீபத்தில் நடைபெற்ற ப்ரஸ்மீட்டில் அவர் பேசியதில் வெளிப்பட்டது. படத்தின் மொத்த குழுவிற்கும் நன்றி சொல்லி பேசிய அவர், “நான் ஆடியோ லாஞ்சில் என்ன பேசப்போகிறேன் என்பது என் அப்பாவிற்குத் தெரியாது. அதனால் ப்ளான் பண்ணி நாங்கள் எதுவும் பேசவில்லை. என் அப்பா இருக்கும் உயரத்திற்கு அது தேவையுமில்லை. மேலும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கலாம்” என்றார். இப்போது இந்த ஆர்டிகளின் முதல் வரியைப் படியுங்கள்