கேரளாவில் இருந்து நடிக்க வந்த நடிகைகளில் ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகைகள் பலர் இருக்கின்றனர். அவர்களில் லட்சுமிமேனனும் ஒருவர். சிறுவயதிலேயே அதாவது படித்துக் கொண்டு இருக்கும் போது நடிக்கத் தொடங்கிய லட்சுமி மேனனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. குறிப்பாக ‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’ போன்ற படங்களில் அவரின் நடிப்பு
ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டது. பின்னர் அவரின் உடல் எடையைக் காரணம் சொல்லி பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. லட்சுமி பெரும் சிரத்தை எடுத்து உடல் எடையைக் குறைத்த போதும் கூட முன்னர் போல் வாய்ப்புகள் வரவில்லை. கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து விலகியிருக்கும் லட்சுமி மேனன் தற்போது தொடர்ச்சியாக கல்லூரிக்கு சென்று படிப்பை தொடர்கிறாராம்.