இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது…
லேபில் என் மூன்றாவது படைப்பு ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இதில் என்னை ஈஸியாக வைத்துக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவர் தான் எனக்காகச் சேர்த்து உழைத்தார். எனக்குக் கிடைத்த கிஃப்ட் அவர். அவருக்கு நன்றி. இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவரும் என்னை மிகவும் நம்பினார்கள், எல்லோரும் சினிமாவில் சாதித்தவர்கள், அவர்கள் தரும் உழைப்பைச் சரியாக எடுத்துக்கொண்டாலே போதும். இந்த சீரிஸ் நன்றாக உருவாக காரணம், என் டைரக்சன் டீம் தான். என்னையே அவர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். இதற்கு முன் வேட்டை மன்னனில் அஸிஸ்டெண்டாக இருந்த போது அவர் நடிகராக இருந்தார், இப்போது அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்தார் நன்றி. எங்கள் டீமில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது அதைத்தாண்டி, உங்களுக்காக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தான்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.