Tamil Movie Ads News and Videos Portal

லாந்தர்- விமர்சனம்

லாந்தர் என்றால் இரவில் ஒளி என்று பெயர். இந்த இரவில் நமக்கு ஒளி கிடைத்ததா? ம்ஹும்

ஹீரோ விதார்த் கோவையில் உள்ள ஏசிபி. அவருக்கு ஒரு வித்தியாசமான நோய் உண்டு. ரைட்டு! அப்புறம்.. அந்நியோன்மாக இருக்கும் கணவன் மனைவியான ஒரு ஜோடிக்குள் ஒரு பெரிய பிரச்சனை எழுகிறது. ஓஹோ அப்புறம்? அப்புறம் கோவை சிட்டியில் ஒரு மனித உருவம் எதிரில் தென்படும் அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறது. அதை யார் என்று கண்டுபுடிக்க விதார்த் வீட்டிலிருந்து இரவோடு இரவாக கிளம்பி வருகிறார். அந்த ஒரு இரவுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் கதை

லாந்தர் வெளிச்சத்தில் கொஞ்சம் போலதான் தெரிகிறார். அவரின் நடிப்பிற்கு துளி கூட உதவவில்லை படத்தின் கதையும் திரைக்கதையும். இரு ஹீரோயின்களும் தங்களால் முடிந்தளவு ஓவர் ஆக்டிங் செய்துள்ளனர். வேறு சொல்லிக்கொள்ளும் படி ஒருவரும் நடிக்கவில்லை

இசை என்ற பெயரில் பெரும் வதையை நிகழ்த்தியுள்ளார் இசைஞர். ஒளிப்பதிவில் கொஞ்சம் கூட காட்சிகளுக்கான சுவாரஸ்யம் இல்லை. எடிட்டிங் உள்பட மொத்த டெக்னிக்கல் டீமும் சறுக்கியுள்ளது

திரைக்கதை என்பது மருந்திற்கும் படத்தில் இல்லை. சுத்தமாக வொர்க்கவுட் ஆகாத காட்சிகள நம்மை சோதிக்கின்றன. லாந்தர் என்ற டைட்டிலில் மட்டும் வெளிச்சம்.
மேலும் சகிக்க முடியாத ஒரு குழந்தை கொலைக் காட்சி படத்தில இருக்கிறது. அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கவே சகிக்கவில்லை. மிகப்பெரிய கற்பனை வறட்சி அக்காட்சி.

லாந்தர்- டேஞ்சர்