சாஸ்திரமே பெரிது என்று நம்புகிற சமந்தாவின் அப்பா, சைன்ஸே பெரிது என்று நம்புகிற விஜயதேவரகொண்டாவின் அப்பா. இவர்களுக்கு இடையில் காதலே பெரிது என்று நம்பும் சமந்தா&VD. பெற்றவர்களை மீறி இருவரும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள். காதலர்களாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் கல்யாணத்திற்குப் பின் எப்படியெல்லாம் மாறுகிறது முடிவில் என்ன ஆகிறது என்பதே இப்படத்தின் கதை
டக்கென நம் வாழ்வோடு சம்பந்தப்படுத்திக்கிற பெண்ணாக மாறி நடிப்பில் அதகளம் பண்ணியிருக்கிறார் சமந்தா. காதலியாக இருக்கும் போதும்,மனைவியாக மாறும் போதும், குழந்தை விசயத்தில் இயல்பான பெண்ணாக இருக்கும் போது சமந்தா சமத்து. ஆஜானுபாகு விஜய் தேவரகொண்டா ஈகோ எட்டிப்பார்க்கும் இடங்களில் நடிப்பும் அவருக்கு நன்றாகவே எட்டிப்பார்க்கிறது. படத்தின் ஆரம்ப காதல் எபிசோடில் அவர் தான் அதிகமாக ஸ்கோர் பண்ணுகிறார். சாஸ்திரியாக வர்ற முரளி சர்மா நேர்த்தியாக நடித்துள்ளார். நாத்திகராக வரும் சச்சின் படேகர் அசத்தியுள்ளார். எல்லோரும் வாழ நினைக்கிற ஒரு கணவன் மனைவியை கண்முன் நிறுத்தி ஆச்சர்யப்படுத்துகிறார்கள் ஜெயராமும் ரோகிணியும். பாட்டி லெட்சுமி, அம்மா சரண்யா பொன்வண்ணன் உள்பட அனைவரும் நடிப்பில் சிறப்பு!
ஹேஷாம் அப்துல் வஹாப் தான் இசை. பேக்ரவுண்ட் ஸ்கோர்& படத்தின் காதல் பாடல்கள் அனைத்தும் அசத்தல். குறிப்பாக ஆராத்யா பாடல் ரிப்பீட் மோட். கார்கியின் லெரிக்ஸும் நல்லாருந்தது. முரளி ஜியின் ஒளிப்பதிவு கொஞ்ச நேரமே என்றாலும் மணிரத்னம் காட்டிய காஷ்மீரை அப்படியே காட்டுகிறது. பாடல்களின் விஷுவலும் செம்ம. எடிட்டர் பிரவின் படி படத்தில் இன்னும் சில அடிகளை அவர் டேபிளிலே பிடிச்சு வச்சிருக்கலாம். ரொம்ப லென்த் சார்
அழகான பெண்ணை பார்த்த உடனே காதல் வயப்படுகிற ஹீரோ..மறுக்குற ஹீரோயின், பின் விடாமல் துரத்துன் ஹீரோன்னு படம் ஆரம்பிக்கும் போதே 90s நெடி அதிகமாகத்தான் இருக்கிறது. அதை கூடுமான வரை இண்டெர்ஸ்டிங்கான விசயங்களை அடுக்கி கொண்டு போவதால் தப்பிக்கிறார் இயக்குநர் சிவ நிர்வாணா. ஹீரோவுக்கு காதல் கை கூடுவதே இலக்கு என்ற டெம்ப்ளேட்டில் படம் துவங்குவதால் கதைக்குள் வருவதற்குள் அதிக நேரம் ஆகிறது. அதுதான் படத்தில் நம் பொறுமையை சோதிக்கிற இடம். ..But second half கணவன் மனைவி பிரச்சனை என்பதாக படம் துவங்கும் போது நமக்கு கனெக்ட் ஆகுற விசயங்கள் படத்தில் நிரம்பத் துவங்கிடுது.
ஈகோ, அன்பு, என எப்போதும் வாழ்வில் அலைமோதும் விசயங்களை பேசி இருப்பதால் இந்தக் குஷி உங்களை ஏமாற்றாது.
3/5
-மு.ஜெகன் கவிராஜ்