Tamil Movie Ads News and Videos Portal

‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தேவரகொண்டா- சமந்தா ஜோடியின் நட்சத்திர மதிப்பிற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பல மொழிகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை சமந்தாவும் காதலுடன் கைகோர்த்துக்கொண்டு தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.