வருத்தப்பட வைக்கும் தற்போதையச் தமிழ் சினிமா சூழலில் ஒரு நல்ல படமாக வெளியாகியுள்ளது குரங்கு பெடல்
ஈரோடு அருகே ஒரு கிராமம். 1980- காலகட்டத்தில் நடக்கிறது கதை. கோடை விடுமுறையை சைக்கிள் ஓட்டி கழிக்க நினைக்கிறார்கள் ஐந்து சிறுவர்கள். இவர்களில் ஒரு சிறுவன் சைக்கிள் வாங்கிவிடுகிறான். மூன்று சிறுவர்கள் சைக்கிள் வாங்கியவனோடு சேர்ந்துகொள்ள, மீதமுள்ள ஒரு சிறுவன் தன் தந்தைக்கு தெரியாமல் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டுகிறான். அதனால் அந்தச் சிறுவனுக்கு ஏற்படும் சிக்கல்களையும் விடைகளையும் வாழ்வியல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்
எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதை நிறைத்துக்கொடுக்கும் அற்புத கலைஞன் காளி வெங்கட். இந்தப்படத்திலும் அதையே செய்துள்ளார். ஐந்து சிறுவர்களுமே டாப் ஆக்டிங் தான். குறிப்பாக நம் கதையின் நாயகன் சந்தோஷா பின்னியிருக்கிறார்
ஒளிப்பதிவாளர் சமரசமற்ற உழைப்பைக் கொடுத்துள்ளார். அந்தக் காலகட்டத்தை கண்ணில் காட்ட ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். ஆர்ட் டைரக்டர் உழைப்பு இதில் நினைவுகூரத்தக்கது. எடிட்டர் தம் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். இசை அமைப்பாளர் கதையின் கனத்தை கணத்திற்கு கணம் தன் இசையால் உறுதி செய்துள்ளார்.
ஒரு சிறுகதையை படமாக்க வேண்டும். அது குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் என நினைத்து படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு எக்ஸ்ட்ரா பாராட்டுக்கள்.
ராசி.அழகப்பனின் சைக்கிள் என்ற சிறுகதையை நல்ல திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குநர் கமலக்கண்ணன். இன்றைய வணிக போதை சினிமாவுக்கு மத்தியில் ஒரு மனித போதையை அளித்து நெகிழச் செய்துள்ளது இந்தக் குரங்கு பெடல்
4/5
-மு.ஜெகன் கவிராஜ்