Tamil Movie Ads News and Videos Portal

’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி,

“என்னுடைய கனவை அடைய ஆதரவு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. நக்கலைட்ஸூம் என் குடும்பம்தான். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முத்தமிழ், நிவி, ஜென்சன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ். பிரசன்னா எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியுள்ளார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.

நடிகர் மணிகண்டன்,

“இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது ’பாட்டல் ராதா’ படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். ‘குடும்பஸ்தன்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொங்கு தமிழை நக்கலைட்ஸ் டீம் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பிரசன்னா சார் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.

டெக்னிக்கல் டீமும் கஷ்டப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபப்படாத கனிவான தயாரிப்பாளர் வினோத். எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.