Tamil Movie Ads News and Videos Portal

இயக்குநருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் முக்கியமான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் பல முன்னணி நடிகர்களின் நடிப்பு வாழ்க்கைக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இவர் சமீபகாலமாக படங்கள் இயக்குவதைக் குறைத்துக் கொண்டு படங்களில் அதிகமாக நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.

மேலும் இன்றைய தலைமுறை இயக்குநர்களில் தன்னை தேடி வந்து ஆலோசனை கேட்கும் இயக்குநர்களுக்கு தன் அனுபவத்தின் வாயிலாக தான் தெரிந்து கொண்ட விசயங்களை ஆலோசனையாகவும் வழங்கி வருகிறார். சென்ற ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை, கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, ‘கோமாளி’ படத்தை வெகுவாக பாராட்டிய அவர், பிரதீப்பிற்கு தங்கச் சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார்.