3 ஆண்டுகளாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக “லாபம்” படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இது தவிர்த்து தெலுங்கில் ரவி தேஜா ஜோடியாக “க்ராக்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ஒரு சிறுவனுக்கு தாயாகவும் நடிக்கிறார் என்பது போஸ்டர் மூலமாக தெரிய வந்துள்ளது. நேற்று ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் படம் மே 8ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படங்கள் நடிப்பதில் ஆர்வமாகி வருகிறார்.