Tamil Movie Ads News and Videos Portal

சூரி-அன்னா பென் நடிக்கும் ‘கொட்டுக்காளி’!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன், பாராட்டுக்குரிய திரைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், அதன் அடுத்த தயாரிப்பான ‘கொட்டுக்காளி’ மூலம் பார்வையாளர்களை கவர உள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது என அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. கதையின் நாயகனான சூரி மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாள நடிகை அன்னா பென் ஆகியோரும் இந்தப் படத்தில் உள்ளனர். மேலும்,
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ புகழ் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குவதும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.’கொட்டுக்காளி’ படத்தை எழுதி இயக்கியவர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

#Kottukkaali #கொட்டுக்காளி