கொசு மருந்து மிஷினுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்
‘மாநகரம்’ படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கடந்த தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் வெளியான “கைதி” திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. படம் வெளியாகி இன்றோடு 25ம் நாள் முடிவதை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் “படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் மக்களுக்கு எனது நன்றி. மேலும் அந்த கொசு அடிக்கும் மருந்திற்கும் குட்டி நன்றி.” என்று தெரிவித்துள்ளார். தற்போது தளபதி 64 படத்தில் தளபதியை கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.