Tamil Movie Ads News and Videos Portal

கூகுள் குட்டப்பா- விமர்சனம்

மென் உணர்வுகளை தொட்டுச் செல்லும் படங்கள் என்றும் கவனிக்கப்படும் படமாக மாறும். கூகுள் குட்டப்பா படமும் மென் உணர்வுகளைத் தொடும் படம் தான். அது தடம் பதித்திருக்கிறதா?

சொந்த ஊரில் சொர்க்கம் இருக்கு என்று உறுதியாக நம்பும் கே.எஸ் ரவிகுமார் தன் மகன் தர்ஷனை ரோபோட்டிக் இன்ஜினீயரிங் படிக்க வைத்தாலும் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தந்தை சொல் மீறும் மகன் தந்தைக்கு உதவியாக ஒரு ரோபோவை பணி அமர்த்துகிறார். ரோபோ என்பது எமோஷ்னல் அற்ற ஒரு இயந்திரம் என்பதை மறந்து கே.எஸ் ரவிகுமார் ரோபோவோடு மிங்கிளாக அடுத்தடுத்து பல உளவியல் போராட்டம் நடக்கிறது. இறுதியில் இயந்திரம் வென்றதா..இயல்பான அன்பு வென்றதா என்பதே கதை

கே.எஸ் ரவிகுமாருக்கு இந்தப்படம் ஒரு பக்கா ரீ என்ட்ரியாக மாறியிருக்கும் இயக்குநர்கள் சபரி& சரவணன் இன்னும் மெனக்கெட்டிருந்தால்.
இருந்தும் கூடுமான வரை கேரக்டரோடு கே.எஸ் ரவிகுமார் பொருந்திப் போக முயற்சித்திருக்கிறார். தர்ஷன் தன் நடிப்பில் இன்னும் பலபடிகள் தாண்டவேண்டும்..லாஸ்லியா கேரக்டர் பெரிய மாஸ் இல்லாவிட்டாலும் லாஸ் இல்லை. ப்ராங்க் ஸ்டார் ராகுல் கேரக்டர் மட்டும் பக்காவாக மனதில் பதிகிறது. சில இடங்களில் மட்டும் காமெடி காட்டி சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. கே.எஸ் ரவிகுமாரின் முன்னாள் க்ரஸாக வரும் பெண்மணியும் அகத்தியிருக்கிறார்

படத்தின் பலம் நேர்த்தியான ஒளிப்பதிவு எனலாம். எல்லா ப்ரேமிங்கும் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது. பின்னணி இசை சோபித்த அளவிற்கு பாடல்கள் பலம் சேர்க்கவில்லை

திரைக்கதையில் இன்னும் போக்கஸ்டாக இருந்து எமோஷ்னல் ஏரியாக்களை கவர் செய்திருந்தால் குட்டப்பா கெத்தப்பாவாக மாறியிருப்பார். தற்போது தப்பப்பா என்று சொல்ல முடியாத..ஓகேப்பா என்ற ரேஞ்சில் நம்மை கவர்கிறார்

-மு.ஜெகன் கவிராஜ்