Tamil Movie Ads News and Videos Portal

கொஞ்சல்வழிக் கல்வி-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

2011 to 2014 வரைக்குமான பேரின்ப பெருங்காதல் பயணத்தில் அண்ணன் Thapoo Sankar தான் என்னை முழுதுவதும் ஆண்டிருந்தார்

இன்று அறிவியல் கலந்த வர்ணனையோடு கூடிய இந்த நூலை வாசிக்கையில் பழைய நினைவுக்குள் முங்கியெழுந்தேன்

அவரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?, இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது, அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிலோமீட்டர்,என அவரின் கவிதை நூல்களைக் கொண்டே காதல் வளர்த்த நாட்கள் அவை.

இன்றும் இளைஞர்களின் பல status content-களில் தபூ அண்ணன் தான் இருக்கிறார்.

/அழகான பொருட்கள் எல்லாம் உன்னை நினைவுப்படுத்து கின்றன…உன்னை நினைவுப் படுத்துகின்ற எல்லாமே அழகாய் தான் இருக்கின்றன/

/எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?/

இந்த வரிகளை வைத்து பலவழிகளை உருவாக்கி அப்பாதையில் கொஞ்சல் வழிப்பயணம் மேற்கொண்ட காதலர்கள் நிறைய….

நடிகர் விஜய் கூட தனக்குப் பிடித்த கவிதையாக ஒன்றைச் சொல்வார். அதுவும் தபூ சங்கரின் கவிதை தான்.

பெரு இலக்கியம், இலக்குகளை இயம்பும்…அண்ணனின் இலக்கியம் காதலை மட்டுமே விரும்பும்…காதலை அடைவதை விட பெரிய இலக்கு ஒன்று இருக்கா என்ன?

தபூ அண்ணனின் கவிதைகள் காதலுக்கானவை…காதலோ வாழ்தலுக்கானது…