தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் வரும் 21-ஆம் தேதி வெளியாகவுள்ள கொலை படமும் கதையாகவும் களமாகவும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். இன்று இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் ஆண்டனி உள்பட படக்குழு மொத்தமும் கலந்துகொண்டது. தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான ஒரு அற்புதம் இப்படத்தின் பிரஸ்மீட்டில் நடந்தது. ஒரு படத்தின் பிரஸ்மீட்டிற்கு அப்படக்குழுவினர் மட்டும் வந்து படம் பற்றிபேசுவது வழக்கமானது. ஆனால் இன்று கொலை படத்தின் பிரஸ்மீட்டிற்கு நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் படத்தைப்பற்றி படக்குழு பேசும்போது, “கொலை படம் உழைப்பிற்கான ஊதியத்தைத் தரும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்கள். மேலும் இப்படம் நான்கு வருடங்களாக இயக்குநரால் செதுக்கப்பட்டது என்கிறார்கள். கொலை ரசிகரை கவரும் என்ற நம்பிக்கை லைட்டா வருது. பார்க்கலாம்👍
#kolai