Tamil Movie Ads News and Videos Portal

சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் “கொடியன்”!

கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே , மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது.நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டுவருகிறது.கொடியன் படமும் மனிதனுக்குள் இருக்கும் கொடிய மனிதத்தை பற்றிபேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது சர்வதேச விருதுகளைப்பெற்றுவருகிறது.

‘இது வழக்கமான திரில்லர் பார்முலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறோம் , அது படம் வெளியாகும்போதுதான் தெரியும் அது எந்த அளவுக்கு கவனம் பெருகிறது என்பது. இந்த படத்தில் நிவாஸ் ஆதித்தன் நாயகனாக நித்யஸ்ரீ கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.யோக் ஜேப்பி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.மற்றும் லிசி ஆண்டனி, புதுமுகம் விக்டர் பிரபாகர் நடிக்கிறார்கள்.இந்த படத்திற்கு இசை கேபர் வாசுகி, பின்னணி இசை கிரிநந்த் -விஜய் கார்த்திகேயன் செய்திருக்கிறார்கள்.விரைவில் தியேட்டரில் வெளியாகவிருக்கும் கொடியன் படம் பல சர்வதேசவிருதுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.