ஹிப்ஹாப் ஆதி இளைஞர்களின் எனர்ஜியாக திகழ்ந்து வருகிறார். அவரின் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன. தற்போது ராஜ் இயக்கத்தில் நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசைவிழா ஒன்று நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை குஷ்பு
பேசும்போது,
“நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்” என்றார்.