இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று பெருமை பெற்ற கிரண் பேடி, தற்போது அண்டை மாநிலமான புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் கிரண்பேடி தனது இணையதளபக்கத்தில், “சூரியனிலிருந்து வரும் சத்தம் தான் “ஓம்” என்று ஒலிக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.” இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
— Kiran Bedi (@thekiranbedi) January 4, 2020
இந்தப் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு, “மேடம் உங்களிடம் மரியாதையுடன் நான் ஒரு சந்தேகத்தை கேட்க நினைக்கிறேன். அனைத்து தலைவர்களும் பா.ஜ.கவில் சேருவதற்கு முன்னர் பத்திரமாக உங்கள் மூளையை கலட்டி வைத்துவிட்டுத்தான் சேருவீர்களா..?” என்று கேட்டிருக்கிறார். தற்போது துணை நிலை ஆளுநரைப் பார்த்தே இப்படி குஷ்பு கேட்டுவிட்டாரே..? என்று இணையதளம் கொதித்துக் கொண்டிருக்கிறது.