Tamil Movie Ads News and Videos Portal

மூவிவுட் OTT தளத்தில் ரிலீசான மலையாளப்படம்!

யதார்த்த படங்கள் என்றாலே மலையாள படங்கள் என்று சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாய் பல படங்கள் மலையாளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பல உலக பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற “கேரளா பாரடைஸோ” என்கிற திரைப்படம் தற்போது ‘Moviewud’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.ஒரு முறை பார்க்க ரூ. 50 கட்டணம் செலுத்தியும், ஆறு மாதம் தளத்தில் உள்ள எல்லா படங்கள் மற்றும் சீரீஸ்கள் பார்க்க ரூ.200ம், வருடத்திற்கு ரூ.365ம் கட்டி பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details… (ஆண்ட்ராய்டு)
https://apps.apple.com/sg/app/moviewud/id1539262961 (IOS)
https://moviewud.in/ (வலை)

Kerala Paradiso – கதை

சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போது அங்கே இருந்த தியேட்டரை நினைத்து நாஸ்டால்ஜிக் விஷயங்களை நண்பர்களுடன் அசை போடாதவர்கள் இருக்கிறார்களா? என்ன? அலங்கார் தியேட்டரில் ஜாக்கிசானின் ப்ராஜெக்ட் ஏ பார்த்துவிட்டு, அவரைப் போலவே நண்பர்களுடன் ஓடுகிற பஸ்ஸில் ஏற முயன்ற நாட்களை இன்றைக்கும் நானும் என் கல்லூரி நண்பர்களும் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சிரிக்காமல் இருந்தது இல்லை.

அப்படியான ஒரு சிறு கேரள ஊரில் வெளிநாட்டுக்கு போய் சம்பாரித்து வந்த காசில் சினிமா பாரடைசோ படம் கொடுத்த தாக்கத்தில் தன் சொந்த கிராமத்தில் “கேரளா பேரடைசோ” என்கிற் தியேட்டரைக் கட்டியவரின் மருமகன். தினமும் தியேட்டரைச் சுற்றியே வலம் வருகிறவனுக்கு அத தியேட்டர் பேங்க் கடனுக்காக மூடப்பட, தியேட்டர் கட்டிய மாமனுக்கு உடல் நலமில்லாமல் போக, தன் காதல், தியேட்டர் இடத்தை அடைய நினைக்கும் ஆட்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்களை சினிமாவக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அவனது அன்பான குடும்பம், கூட்டமில்லாவிட்டாலும், கதகளிக்காக் தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருக்கும் கலைஞன்.

சினிமா பாட்டுக்காக ட்ரான்ஸிஸ்டருடனே வாழும் ராணுவக்காரர், சினிமாவும் சரக்கும் ஒண்ணு எனக்கு ஏன்னா இது ரெண்டும் கொடுக்குற போதை வேறு ஏதும் கொடுக்காது எனும் ராகவன், என சுவாரஸ்யக் கேரக்டர்களை வைத்து, மிகச் சாதரணமான விஷயத்தை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்வதில் மலையாள சினிமாக்காரர்கள் வல்லவர்கள் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் பிஜோய். இது இவருக்கு முதல் படம். கோவா பெஸ்டிவலில் அங்கீகரிக்கப்பட்டு நேரடி ஓடீடீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஃபீல் குட் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கான படமிது. டோண்ட் மிஸ்.