கீர்த்தி சுரேஷின் “பென்குயின்” படப்பிடிப்பு நிறைவு
மகாநதி திரைப்படத்திற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் தனக்கு வந்த எல்லா வாய்ப்புகளையும் ஏற்று நடிக்கவில்லை. தேர்வு செய்து மட்டுமே நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் ‘பென்குயின்’ படத்தில் நடிக்க சம்மதித்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கீர்த்தி சுரேஷின் பிறந்த தினமான கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியானது. அதில் கர்ப்பிணி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 53 நாட்களில் முடிவடைந்திருக்கிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், ‘நான் பணியாற்றிய குழுக்களில் இது மிகவும் சிறப்பான குழு; இந்த பயணத்தை இனிமையானதாகவும் ஞாபகமுள்ளதாகவும் ஆக்கியிருக்கிறீர்கள். நாம் என்ன உருவாக்கி இருக்கிறோம் என்பதை காண ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.