ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தொடரி ஆகிய படங்களில் நடித்த போது கீர்த்து சுரேஷை தமிழ் ரசிக மனம் மற்றுமொரு வழக்கமான கதாநாயகி வட்டத்தில் தான் கீர்த்தியையும் அடைத்தது. ஆனால் தமிழில் ‘நடிகையர் திலகம்’ தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயர்களில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து, தான் வழக்கமான டூயட் பாடும் நாயகி அல்ல என்று அழுத்தமாக நிரூபித்தார் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் பென்குயின்,
மலையாளத்தில் மரக்காயர்; அரபிக்கடலின்டே சிங்கம், தெலுங்கில் குட் லக் சக்தி ஆகிய படங்களில் நடித்து வந்தாலும் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் “மிஸ் இந்தியா” படத்தை தான். இப்படத்தில் மாடலிங் துறையில் ஜொலிக்க விரும்பும் பெண்ணாக வித்தியாசம் காட்டியிருக்கும் கீர்த்தி, இப்படம் தனக்கு நடிப்பாக மற்றொரு விருதை பெற்றுத் தரும் என்று நம்புகிறார். நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் மார்ச் 6ல் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரல் 17ம் தேதிக்கு ரீலீஷ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்.