ஒரு க்ரைம் திரில்லர் அனுபவத்திற்கு முயற்சித்திருக்கிறது கைலா. ஒர் இளம் பெண் எழுத்தாளர் பேய் இருப்பதாய்ச் சொல்லப்படும் ஒரு வீட்டைப் பற்றியும் அவ்வீட்டின் மர்மங்களைப் பற்றியும் ஒரு நூல் எழுத முயற்சிக்கிறார். அவர் திரட்டும் தகவல்களின் வழிவாகவும், அவ்வீட்டின் அருகில் நடக்கும் சில கொலைகளாகவும் படம் விரிகிறது.
படத்தில் நாயகி தான் பிரதான பாத்திரம். கூடுமான வரையில் கன்வின்சிங்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவர் இன்னும் கவனிக்க வைத்திருக்கலாம். நாயகிக்கு எதிர்நாயகனாக நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசன் இந்தப்படத்தை எழுதி
இயக்கி தயாரித்தும் இருக்கிறார். பொறுப்பை உணர்ந்து அவர் நடித்திருந்தாலும்
முக்கியமான காட்சிகளில் அவரின் முகம் இன்னும் நல்ல நடிப்பிற்கு பழக்கப்பட வேண்டும்.
கவுசல்யா வரும் அந்த ப்ளாஸ்பேக் போர்ஷனில் இருந்த அழுத்தம் படம் நெடுக இருந்திருக்கலாம். இசை ஒளிப்பதிவு இரண்டும் கதைக்கேற்ற உழைப்பைக் கொடுத்திருக்கின்றன.
வசனங்களில் மேம்போக்குத்தனம் தெரிகிறது. சிலபல சறுக்கல்கள் இருக்கிறது தான்.
இருந்தாலும் புதியவர்களாக வந்து சினிமாவில் புதிய கதை சொல்லல் முயற்சியை கையாண்ட துணிச்சலுக்காக கைலாவை பாராட்டத்தான் வேண்டும்
-மு.ஜெகன்சேட்