Tamil Movie Ads News and Videos Portal

காவிரியின் மைந்தன் பொன்னியின் செல்வனாக “ஜெயம் ரவி”

அமரர் கல்கி எழுதிய உலகப் பிரசித்தி பெற்ற நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலின் படப்பிடிப்பு ஒரு வழியாக சென்றவாரம் தொடங்கியிருக்கிறது. சுந்தர சோழராக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், கரிகால சோழனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்க, கதையின் முக்கிய கதாபாத்திரமான அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி தொடர்பான காட்சிகள் தற்போது தாய்லாந்தில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இக்கதைப்படி அருள்மொழி வர்மன் சிறுவனாக இருந்த போது, காவிரி ஆற்றுக்குள் விழுந்துவிட, அவரை ஒரு பெண் காப்பாற்றுவாள். அவள் யார் என்று தெரியாமல் போகும் போது, அந்த காவிரி அன்னையே வந்து அருள்மொழிவர்மனைக் காப்பாற்றியதாக நம்பி அன்று முதல் அவரை காவிரியின் மைந்தன் அதாவது பொன்னியின் செல்வன் என அரசகுடும்பத்தினர் அழைக்கத் தொடங்கிவிடுவர். அந்த அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். அருள்மொழிவர்மனின் தமக்கை குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியுடன் நடிக்கும் படத்திற்காக இப்படத்தில் இருந்து விலகி இருப்பதால் அக்கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று இப்பொழுது வரை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது.