பேய்களே வந்து, “டியர் டைரக்டர்ஸ்.. ப்ளீஸ் எங்களை விட்டிடுங்க” என ஒரு ரிக்வஸ்ட் கொடுக்கும் அளவிற்கு தமிழ்சினிமாவில் பேய்க்கதைளை அள்ளித்தெளித்து வருகிறார்கள் இயக்குநர்கள். அப்படியிருந்தும் யாமிருக்க பயமே என்ற படத்தை வித்தியாசமாக கொடுத்தார் அப்படத்தின் இயக்குநர். அவரின் அடுத்த பேய்படம் என்பதால் காட்டேரி படம் மீது ஏக எதிர்பார்ப்பு இருந்தது. காட்டேரி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
ஒரு ஊர்ல ஒரு பேய் எனத்துவங்கும் கதை தான் என்றாலும் சுவாரஸ்யம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்
தன்னையும் தன் நண்பர்களையுன் சிக்க வைத்த வில்லனைத் தேடிச் செல்கிறார் வைபவ். வில்லனோ புதையலைத் தேடுகிறான். எதிர்பாரா விதமாக ஒரு ஊரே பேயாக மாறி நிற்க..எல்லோருக்கும் சிக்கல் எழுகிறது. சிக்கல் எப்படி தீர்ந்தது என்பதே கதை
வைபவ் நடிப்பில் மெச்சூட் பெரிதாக இல்லாவிட்டாலும் ஓரளவு சமாளிக்கிறார். காமெடி டீம் செய்யும் காமெடிகள் எல்லாமே கடுப்பேற்றும் ரகங்கள். குறிப்பாக ரவிமரியா செய்யும் அட்ராசிட்டி ராவடி ராவடி. வரலெட்சுமி சரத்குமார் வரும் இடங்கள் கூட பெரிதாக ஈர்க்கவில்லை
பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்கணும் என்ற அவசரம் மட்டும் படம் ந்டுக