Tamil Movie Ads News and Videos Portal

கதவைத் திற காற்று வரட்டும்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

தலைவன் Full form-ல இருக்கும் போது எழுதிய புத்தகம். வரிக்கு வரி சும்மா தத்துவமும் ஆன்மிகமும் அள்ளுது. 8 வருடத்திற்கு முன்னாடி சேமிப்புக்கு வந்த புத்தகம் இப்பதான் கையில கிடைச்சிது.
புத்தகம் என்ன சொல்லுது?

விருப்பங்களை சேமிக்க சேமிக்க அது வெறியாக மாறும் சூழல் வருகிறது. விருப்பங்களை கொன்றொழிப்பது இயலாத காரியம். அதை மெல்ல நடக்க விட்டு, அதன் பின்னாடிச் சென்று,பின் வெல்லும் வழியைக் காணவேண்டும் என்கிறது நூல். நித்யானந்தா எப்போதுமே விருப்பங்களை காக்க வைப்பதில்லை என்பதை உணர முடிந்தது..நினைத்தை முடிப்பது அவருக்கு கைவந்த (கையில் வந்த)கலை போல!

ஆன்மிகமும் அது சார்ந்த வணிகமும் முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்தியே நடக்கிறது என்பதை இந்த நூல்வழி உணர முடிந்தது. முற்றும் முடிந்து ஒன்றுமில்லாமல் இருப்பவனுக்கு எதிர்காலம் பற்றிய ஏக்கமும் பயமும் பெரிதாக இருக்காது. பெரும் பணக்காரனுக்கு கற்பனைகளையும் ஆசைகளையும் உடனே நிகழ்த்திப் பார்க்கும் சாத்தியம் இருப்பதால், இறந்தகாலம் எதிர்காலம் ஓரளவு அவனது சட்டகத்திற்குள் வராது..

“இருப்பது போதாது என்பதும், வருவதை சிறப்பாக்கணும் என்பதும், கிடைத்ததையும் கிடைக்காமல் போனதையும் சதா நினைத்து வெம்மும் வாழ்வும் நடுத்தர வர்க்கத்தினுடையது. ஆக நடுத்தர வர்க்கத்தின் சிந்தனை என்பது சதா இறந்த காலம் பற்றியும் எதிர்காலம் பற்றியுமே இருக்கும். நிகழ்காலத்தில் இருப்பதென்பது அவர்கள் வாழ்வில் நிகழாது. மனித வாழ்வில் நிரந்தரம் என்பது நிகழ்காலம் மட்டுமே. அதை 30% உணர்ந்தாலே ஆனந்தம் லேசாக எட்டிப்பார்க்கத் துவங்கும். அதனாலே ஆன்மிகிகள் நிகழ்காலத்தில் இரு..கணத்திற்கு கணம் வாழு எனப்போதிக்கிறார்கள். அந்தப் போதனையில் ஓரளவு நிஜம் இருப்பதால் நடுத்தர வர்க்கம் இப்படியான ஆன்மிகிகளையும் தியான நிலைகளையும் நம்புகிறது என தோன்றுவதுண்டு.

இதில் தியானத்தின் பக்கம் நாம் திடமாக நிற்கலாம். காற்று தான் மனித வாழ்வின் மிகப்பெரிய ஆசான். மூச்சிலிருந்து வெளியே செல்லும் காற்று உள்ளே வரவில்லை என்றால் சில நிமிடங்களில் இறப்பு உறுதி. இப்படி மனிதனின் இறப்பை உறுதி செய்யும் காற்றெனும் கடவுளுக்கு தியானம் பெருமளவில் முன்னுரிமை கொடுப்பதால் காற்று செய்யும் மாற்றங்களை தியானம் வழி நின்று அனுபவிக்கலாம்

மனம் என்பதை கவனிப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. கவனிக்கத் துவங்கினால் அற்புதம் நிகழும் என்பதும் பொய்யில்லை.. மனதைப் பழக்கப்படுத்தினால் அது வசியமாக வாய்ப்புண்டு..ஆனால் திருட்டு மனம் எதையாவது பேசி நம்மை அடிமைப்படுத்தவே முனையும்.
So மனதைத் திறங்கள் மாற்றம் வரும்

மேலும் புத்தகத்தின் இறுதிப்பக்கங்களில் உள்ள ஆன்மிக மார்க்கெட்டிங் முறை ரொம்பவே ஈர்த்தது. எதையும் சந்தைப்படுத்தத் தெரிந்தவனே சாதிக்க முடியும். “விற்கத் தெரிந்தவன் தான் வாழமுடியும்” எனும் அங்காடித் தெரு பட வசனம் நினைவில் வருதா?

மற்றபடி நித்யானந்தா, “ப்ரசண்டில் வாழச்சொல்லி ஜாலியாக இருங்க” ன்றார். ஜாலியா இருக்குறவர் சொல்லும் போது ஜாலியாக இருக்க முடியுமல்லவா!!

அதோட வாழ்க்கை ஒரு போலி என்பதை உணர்ந்தவனுக்கு நித்தமும் ஜாலி தானே.